ஆடு மேய்க்க கூட  இடம் இல்ல ...ஒரு வேளை சாப்பாடு கிடைக்கல..மனம் திறந்த நடிகர் அப்புக்குட்டி..! 

"வாழ்க விவசாயி" என்ற டைட்டிலில் உருவாகியுள்ள படத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா, ஸ்ரீ கல்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கதிர் பிலிம்ஸ் தயாரிக்க பொன்னி மோகன் இயக்கி உள்ளார்.

ஜெய் கிரிஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அப்புக்குட்டி, நாங்கள் விவசாய தொழிலாளர்கள்; எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் கூட கிடையாது; கொஞ்சம் நிலம் இருந்திருந்தால் ஆடு மேய்த்துக்கொண்டிருந்து இருப்பேன்; எனக்கு ஒரு வேளை சாப்பாடு போட கூட என் அம்மாவால் முடியவில்லை; எனவே சென்னைக்கு புறப்பட்டு வந்தேன்; விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குனரிடம் தெரிவித்து இருந்தேன்; அப்போது இயக்குனர் வாழ்க விவசாயி பட கதை பற்றி என்னுடன் தெரிவித்து இருந்தார். அப்போது என் அம்மாவை நேரில் கண்டது போலிருந்தது. உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படம் போலவே இந்த படமும் எனக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படத்தில் என்னுடன் நடித்த நடிகை மந்த்ராவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்; இனிவரும் காலங்களில் நடிகைகள் என்னுடன் நடிக்க ஆர்வம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என சிரித்துக்கொண்டே குறிப்பிட்டுள்ளார் அப்புகுட்டி.