a is the Oviya Where is Trisha Hansika

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டாரை நயன்தாராவை முந்தி ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். தனியார் பத்திரிகை ஒன்று 2017-ஆம் ஆண்டின் விரும்பப்பட்ட பெண் யார் என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

அந்த கருத்துக் கணிப்பின் முடிவை நேற்று முன்தினம் வெளியிட்டது அதில், நடிகை ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2017-ல் 3 வெற்றிப்படங்களை கொடுத்தும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். ஒவியாவுக்கென ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது.

ஓவியா, நயன்தாராவை தொடர்ந்து 3-வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், 4-வது இடத்தில் ஷ்ரத்தா சசிதரும், 5-வது இடத்தில் காஜல் அகர்வாலும், 6-வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7-வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8-வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9-வது இடத்தில் ரூஹி சிங்கும், 10-வது இடத்தில் ஷெர்லின் சேத்தும், 11-வது இடத்தில் அதிதி ராவ் ஹிடாரியும் இடம்பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசாவுக்கு 12-வது இடமும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளது. இதில் என்ன கொடுமையென்றால் கடந்த ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்காவுக்கு 14-வது இடமும், விஜய் சிவகார்த்திகேயன், சூர்யா என முன்னணி நாயகியாக இருக்கும்

கீர்த்திசுரேஷுக்கு 15-வது இடமும், கல்யாணம் முடிந்தும் முன்னணி நாயகியாகவே வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தாவுக்கு 16-வது இடமும் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தமன்னா, ப்ரியா பவானி சங்கர், சாயிஷா, பிந்து மாதவி, ஸ்ருதி ஹாஸன், அமலாபால் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும் பல வருடங்களாக தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துக் கொன்றுக்கும் த்ரிஷாவும் இந்த லிஸ்டில் உள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.
இதில் கொடுமஎன்றால், இந்த பட்டியலில் கடைசி இடத்தை நடிகை ஹன்சிகா பிடித்துள்ளவர்.