நடிகர் விஜய்யின் குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். பின்னர், போராளி படத்தில் ஹீரோயினாக ப்ரமோஷன் ஆன அவர், சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். 

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்திலும் நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், ரஜினியின் மகளாக அவர் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நடத்தியுள்ளார். 
அப்போது, கேட்கக்கூடாத பல கேள்விகளை நெட்டிசன்கள் அள்ளி வீசியுள்ளனர். குறிப்பாக, திருமணம் எப்போது? இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள். நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? கன்னியா? உள்பட மேலும் பல கேள்வி கனைகளை நிவேதா தாமஸ் நோக்கி எறிந்துள்ளனர். 

அதில், சொல்ல முடியாத அளவுக்கு சில மோசமான கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. இதனைக் கண்டு பொங்கி எழுந்த நிவேதா தாமஸ், நெட்டிசன்களுக்கு பதிலளிக்கும் வகையில், "நீங்கள் சக மனிதருடன் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொஞ்சம் மரியாதையும், கண்ணியமும் கொண்டிருங்கள்" என அறிவுரை வழங்கியுள்ளார்.


தமிழில் போதுமான வரவேற்பு கிடைக்காததால், தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிவேதா தாமஸ், தற்போது தர்பார் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.