கைலாசா, தனித்தீவு என கஸா விட்டு அட்ராசிட்டி காட்டி வரும் நித்யானந்தாவில் லீலைகளும் , சேட்டைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் அவர் தற்போது கைவைத்திருப்பது அஜித், விஜய் பாடல்கள் மீது. ஆம் தனது புகழ்பாடும் பாடல்களை அஜித், விஜய் படத்தில் புகழ்பெற்ற பாடல்களின் டியூன்களை அப்படியே காப்பியடித்து பயன்படுத்தி பரவசப்படுகிறார் நித்யா.

 

போலீஸ் தேடி வந்தாலும் அதெற்கெல்லாம் அஞ்சாமல் தினமும் சத்ஸங்கம் செய்யும் வீடியோக்களை நேரடியாக ஒளிபரப்பி வருகிறார் நித்யானந்தா. அந்த சத்ஸங்கம் முடிந்தவுடன் வீடியோக்களில் நித்தியின் புகழ் பரப்பும் வகையில் பல பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதில் விஜய் நடித்த ஆலப்போறான் தமிழன் பாடல் டியூனை காப்பியடித்து ஒரு பாடல் போடப்பட்டுள்ளது. 

அந்தப்படல்களின் வரிகளை ஆளப்போறான் தமிழன் வரிகளை எடுத்து விட்டு பாடுங்கள். கச்சிதமாக பொறுந்தும். இதோ வரிகள்...  

’’வாராண்டி... ஹேஹே... ஏ வீராண்டி... 

நம்ம தெய்வம் பூமிக்கு வந்த நாள்...
இந்த உலகமே கொண்டாடும் திரு நாள்...

கையிலயிலிருக்கும் கடவுளும் கண்கள் முன்னே வந்தானே...

அரியும் சிவனும் ஒன்றாகி நித்யனாகி நின்றானே...

சக்தி என்னும் ரூபத்தை தரிசனமாக தந்தானே..

அவதரித்த திருநாளை போற்றிப்பண்பாடு... 

பூமிக்கு வந்த நாளை வாழ்த்தி கொண்டாடு..!

அழியும் உலக வாழ்க்கையிலே

என்றும் நிலையாய் அழியாப்பொருளாய் தர்மம் காப்பவனே...

விதியையும் மாற்றி வைப்பான் .. நாம் வாழு வாழ்வில் வெற்றிக்கணக்கை துவக்கி வைப்பானே..

உலகம் எங்கும் பாதம் வைத்து சக்தி தந்தானே.... 

பல உள்ளங்களை வாழ வைத்தும் புத்தி தந்தானே...

செம்மழையும் , கடல் மழையும் அய்யன் காலில் அடங்கிடுமே...

அவன் புகழை தினம் தினமும் பாடிப்பாடி மகிழ்ந்தோமே... என தொடர்கிறது அந்தப்பாடல். 

அத்தோடு நிறுத்திக் கொண்டாரா நித்தி. அஜித்தின் வேட்டியிலும் கைத்து விட்டார். அதாவது அவர் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற வேட்டி வேட்டி வேட்டி கட்டு பாடல் டியூனையும் காப்பியடித்து விட்டார்.
அந்தப்பாடலை, 

‘’நித்யா நித்யானந்தா
சத்யா வித்யரூபா...

பிரம்மா நித்யானந்தா..
விஷ்ணு சிவ ரூபா...

ஆனந்த தாண்டவ நித்யா
ஹரே நித்யானந்தா... என மாற்றிப்போட்டு தனது புகழை பரப்பி வருகிறார் நித்தி. இந்தப்பாடல்களை காப்பியடித்ததை அஜித்தும், விஜயும் அறிந்து அதிர்ச்சி அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.