nithya doing modeling and kollywood shocks

திரை உலகில் தன்னுடைய சொந்த பிரச்னை காரணமாகத்தான் மிக அதிக அளவில் பிரபலம் ஆனவர் தான் தாடி பாலாஜி.வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த பாலாஜி தனியார் தொலைக்காட்சி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பலரும்,குறிப்பாக காமெடியாக பேசி மக்கள் மத்தியில் பிரபலமான நிஷா உள்ளிட்டோரும் தாடி பாலாஜியை நிகழ்ச்சியிலியே கொஞ்சலாக பேசும் பல காட்சிகளை மக்கள் பார்த்தனர்

 உண்மையில் இவ்வளவு காமெடி மன்னனா தாடி பாலாஜி என நினைத்தவர்களுக்கு எல்லாம் இடி வந்து விழுவது போல அவருடைய வீட்டு பிரச்னை தலை தூக்கியது. 

சமீபத்தில் தாடி பாலாஜி தன்னை அசிங்கமாக பேசி வருவதாகவும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த அவரது மனைவி நித்யா தற்போது பிரிந்து வாழ்கிறார்.

அதுமட்டும் இல்லாமல், பெற்ற பிள்ளையையே தீயிட்டு எரிக்கும் அளவிற்கு சென்ற தாடி பாலாஜி குறித்த நடவடிக்கை பல முறை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்டது 

இதனை தொடர்ந்து தற்போது பிரிந்து வாழும் நித்யா மாடலிங் பெண்ணாக மாறி உள்ளார்.பெண் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்டு உள்ளார் நித்யா.இவருடைய இந்த போட்டோ தான் தற்போது ஹாட் டாப்பிக்

 இது குறித்து அவர் தெரிவிக்கும் போது,தன்னுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு தன் அப்பா ஆதரவாக இருப்பதால், இப்போதுதான் என் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார் 

பெண் என்பவள் எல்லாவற்றையும் பொறுத்துதான் போகவேண்டும் என்றாலும், எல்லா நேரத்திலும் அது பொருந்தாது என்பதே ...உண்மை ...