180, படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமான நடிகை நித்யா மேனன், தற்போது தமிழில் சூர்யா, விஜய் ஆகிய நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வரும் இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வலுவான கதாப்பாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார், இதில் இவரை பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘ஏன்இப்படி ஆகிவிட்டீர்கள்?’ என்று சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.