காமெடி நடிகர் பாலாஜி மற்றும் நித்யா குடும்ப பிரச்சனை நீதி மன்றம் வரை சென்றது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் தற்போது தன்னுடைய மனைவி நித்யாவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சமாதானம் செய்து விடலாம் என நடிகர் பாலாஜியும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இவர்கள் இருவர் இடையிலும் அடிக்கடி சமாதான கொடியை உயர்த்தி வரும் நடிகர் சென்ராயன்... நித்யாவிடம் இந்த ஒரு முறை பாலாஜியை மன்னித்து விடுமா தங்கச்சி... இனி இது போல் நடக்காது என கூறுகிறார்.

இதற்கு நித்யா பல முறை மன்னித்து விட்டதாகவும் விட்டுங்க அண்ணா... இனி ஃப்ரன்ட்ஸ் ஆக இருந்தாலே போதும் என்று கூறுகிறார். 

இவரின் பதிலுக்கு பாலாஜி எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், அப்படி என்றால் நீ இந்த நிகழ்சிக்கு வந்திருக்க கூடாது என கூற இதற்கு நித்யா தன்னை இங்கு அழைத்தால் வந்ததாக தெரிவிக்கிறார். 

பின் நித்யா பெண் போட்டியாளர்களிடம் இதை பற்றி கூறி அழுகிறார். பாலாஜியோ முதலில் இவளை எலிமினேட் செய்ய வேண்டும் என கூறுவது போல் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.