மலையாளத்தில் மம்மூட்டி – நயன்தாரா இணைந்து நடித்த “பாஸ்கர் தி ராஸ்கல்” என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் மம்மூட்டி – நயன்தாரா இணைந்து நடித்து வெளியான “பாஸ்கர் தி ராஸ்கல்” படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

எனவே இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. அப்போதுதான் அவர் கபாலி படத்தில் பிஸியாக இருந்தார். அதன்பிறகு அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் ரீமேக்கில் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்து வருகிறார். மேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, ராக்வ், சித்திக் மாஸ்டர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் தெறி பேபியான மீனாவின் மகள் நைனிகா நடிக்கிறார். இதில் நிகிஷா பட்டேலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு மாலத்தீவுக்கு செல்கின்றனர் படக்குழுவினர்.

இப்படத்தை சித்திக் இயக்குகிறார் என்பது கொசுறு தகவல்.