திருவண்ணாமலையை சேர்ந்த  சின்னத்திரை நடிகை நிலானியின் காதலர் லலித் காந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கேகே நகரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான் என காந்தியின் சகோதரர் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நிலானி,  காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருந்தார். 

இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து  தற்கொலைக்கு முயன்றார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்தும் காந்தி மரணம் அடைத்தார்.

இதனால் லலித் காந்தி குடும்பத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்போது, போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மரணம் அடைந்த லலித் காந்தியின் சகோதரர், தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான் என கூறியுள்ளார். 

இதுகுறித்து காந்தியின் சகோதரர் ரகுகுமார் கூறுகையில், தன்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நிலானி மட்டுமே. தன்னுடைய தம்பியை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்.

தற்போது வரை உண்மை நிலவரம் என்ன என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தான் நாங்கள் உண்மையை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது. நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறியுள்ளார் லலித் காந்தியின் சகோதரர் ரகுகுமார்.