பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து பிரபலமானவர் மாடல் 'ஆரவ் ' இவர், நடித்துள்ள,  'மார்க்கெட் ராஜா  எம் பி பி எஸ்'  படம்   தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. 

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து பிரபலமானவர் மாடல் 'ஆரவ் ' இவர், நடித்துள்ள, 'மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்' படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நிகிஷா படேல், தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தை தவிர எழில் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும், இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நான் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற பாண்டி முனி படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.

மொத்தம், இந்த வருடம் ஆறு படங்கள் வெளியாகும் அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரத்திரங்ககளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம் என கூறியுள்ளார் நிகிஷா பட்டேல்.இதை வைத்து பார்த்தால் தற்போது முன்னணி நடிகை பட்டியலில் இருந்து வரும் நடிகைகளை விட இந்த வருடம் அதிக படங்களில் நடித்துள்ளார் நிகிஷா .