ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக பிக்பாஸ் ஆரவ்வுடன் லிப்லாக் காட்சியில் நடித்து அதில் 18 டேக்குகள் வரை வாங்கிய நடிகை நிகிஷா பட்டேல், தான் அக்காட்சியில் நடிக்க முதலில் மிகவும் தயங்கியதாக புரூடா விட்டிருக்கிறார்.

தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவின் காதலராக மாறிய ஆரவ், டைடில் வின்னராகி பிரபலமானார். மாடலிங் துறையில் மூன்றாம் நிலையில் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்று தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

 ’ராஜபீமா’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆரவ், நடிகை ஒருவரிடம் அசிங்கப்பட்டிருப்பதாகக் கிளப்பப்படும் ஒரு செய்தி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தை பிரபல இயக்குநர் சரண் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நிகிஷா படேல் நடிக்கிறார். காட்சிப்படி நிகிஷா பட்டேல் ஆரவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும். இயக்குநர் சரண், இது குறித்து நிகிஷாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு உடனே ஓ.கே சொன்ன நிகிதா என்ன காரணத்தாலோ 18 டேக்குகள் வரை வாங்கியிருக்கிறார்.

 ஆனால் இந்த செய்தி இப்படியே வந்தால் கிக் இருக்காது என்று கருதிய இயக்குநர் சரண், நிகிஷா லிப் லாக் காட்சிக்கு முதலில் தயங்கியதாகவும் பின்னரே கதைக்காக வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதாகவும் செய்தி பரப்பியிருக்கிறார். ஆனால் அச்செய்தியை தனக்கு நேர்ந்த பெருத்த அவமானமாகக் கருதி வருத்த மூடில் இருக்கிறாராம் ஆரவ்.