தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல். 'தலைவா' படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 'என்னமோ ஏதோ', 'கரையோரம்', 'நாரதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல். 'தலைவா' படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 'என்னமோ ஏதோ', 'கரையோரம்', 'நாரதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இயக்குனர் எழில், நடிகர் ஜிவி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இன்னும் பெயரிடாத இப்படம், காதல், காமெடி, கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பை முடித்தவுடன் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக நிகிஷா படேல், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்... சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் என்னுடைய பாகத்தின் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன். இந்த படத்தில் ஜிவி.பிரகாஷ் மற்றும் சதீஷுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவங்கள். மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்துவேன் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

ஆனால் என்ன அறுவை சிகிச்சை என அவர் தெரிவிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம், நலம் விசாரித்து வருகிறார்கள்.