25 வயது பாடகரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா ...வதந்திக்கு இன்றுடன்  முற்றுப்புள்ளி..!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து நியூயார்க்கில் வலம் வந்து உள்ளனர்.

சில ஆண்டுகளாகவே இருவருக்கும் நட்பு இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தான அதிகமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று, ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உள்ளனர்.

பின்னர், இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவின் விளைவாக, சல்மான் கானுடன் நடித்து வெளிவர இருந்த பாரத் படத்தில் இருந்து, பிரியங்கா சோப்ரா விலகினார்.

இது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

அதில், மிக முக்கியமான சந்தோஷமான நிகழ்விற்காக பிரியங்கா சோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.

இவர்கள் இருவரும் இன்னும் வெளிப்படையாக கூற வில்லை என்றாலும், நிக் ஜோன்ஸ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிக்கை இதுவரை இவ்வளவு சந்தோசமா பார்த்தது கிடையாது என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும், என்கேஜ்மெண்ட் மோதிரம் வாங்க, நிக் ஷாபிங் செய்து வருகிறாராம்.