இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் 'என்ஜிகே'. கடந்த தீபாவளி தினத்திற்கே வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம்,  ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகி, தற்போது வரை ரிலீஸ் ஆகாமலேயே உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தபடத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளில் சூர்யா பிஸியாக இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் ரசிகர்கள் பலர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என கேள்வியை முன்வைத்து வந்த நிலையில், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, NGK படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். 

அதாவது இப்படம், கோடை விடுமுறையில், மே 31ம் தேதி, ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்ஜிகே படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அதே போல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.