இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'NGK '  . கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம்  ஒரு சில காரணங்களால் தாமதமாகி கொண்டே செல்கிறது.   

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'NGK ' . கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம் ஒரு சில காரணங்களால் தாமதமாகி கொண்டே செல்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல நேரங்களில் சூர்யாவின் ரசிகர்கள், இந்த படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு தயாரிப்பாளரிடம் சமூக வலைத்தளங்களில் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் 'என்.ஜி.கே. குறித்த புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா தன்னுடைய கேரக்டருக்கான பகுதிக்கு டப்பிங் செய்ய தொடங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டப்பிங்கை முடித்துவிடுவார் என்றும், அதன்பின் சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த படத்தில் முதல் முறையாக சூர்யா ஜோடியாக நடிகை ரகுல் ப்ரித்திசிங் நடித்துள்ளார். சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.