அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் 90களில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி.  தற்போது இவர் திரைப்படங்களில் அதிக அளவு கவனம் செலுத்தாவிட்டாலும், பிரபல சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடுவராகவும், இருந்து வருகிறார்.

மேலும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். 

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டால்,  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே நடிப்பது போன்றே பலருக்கும் தோன்றியது.  மேலும் பலர் இவர்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டாமல் விளையாடி வருகின்றனர் என சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் விமர்சித்தனர்.

தாடி பாலாஜி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த மனைவி நித்தியாவை  சமாதானப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவர் அங்கு உள்ள அனைவரிடமும் பாசமாக பேசி பழகினார். எனவே இறுதிவரை இவர் வந்தாலும் ஒரு சில காரணங்களுக்காக மக்கள் இவரை வெளியேற்றினர்.

இந்நிலையில் தற்போது இவருடைய உண்மை முகத்தை பற்றி பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர் கூறியுள்ளார்.

அதாவது காயத்திரி, தன்னுடைய சொந்த ஊருக்கு ஒரு முறை காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, ஒரு ஹோட்டலில் குடும்பத்தோடு சாப்பிட்டோம்.  பின் கார் டிரைவர் காரை ஸ்டார்ட் செய்த போது ஸ்டார்ட் ஆகவில்லை.  அப்போது பக்கத்தில் இருந்த கார் ஓட்டுனரிடம் விசாரித்தோம்.

அப்போது தங்களுக்கு அந்த காரில் தாடி பாலாஜி இருப்பது தெரியாது. பின் தாடி பாலாஜி தகவல் கொடுத்து விட்டு கிளம்பினார். ஆனால் மீண்டும் தங்களுடைய கார் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து தாடி பாலாஜி என்ன பிரச்சனை வேறு ஏதாவது உதவி வேண்டுமா என தன்னிடமும் தன்னுடைய கார் டிரைவரிடமும் கேட்டார்.  எதுவும் வேண்டாம் என்றும் என்று கூறியும்.  ஒரு சக மனிதராக என்ன பிரச்சனை உதவி வேண்டுமா ? என கேட்டார் கேட்டு உதவினார்.

இதிலிருந்து அவருடைய உண்மையான குணம் வெளிப்பட்டது என காயத்ரி கூறியுள்ளார்.  மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இவர் கலந்து கொண்டதால் அன்பாக இருப்பது போல் நடிக்கிறார் என்று நினைத்தேன் இப்போது அவருடைய குணம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.