ரஜினியை பட்டி டிங்கரிங் பார்த்து அஜித்தாக்கும் இயக்குநர்: கோடம்பாக்க கிறுகிறுப்பு.

விஸ்வாசம் எனும் தாறுமாறு ஹிட் படத்தை தல அஜித்தை வைத்து கொடுத்த சிறுத்தை சிவா, அடுத்து ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ எனும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆக்சுவலாக அந்த டைட்டிலும், கதையும் அஜித்துக்காக உருவாக்கப்பட்டதாம். விவேகத்துக்கு முன்பே இதை தலயிடம் அவர் சொன்னபோது .....நோ சிவா! என்று மறுத்துவிட்டாராம். 
அந்தக் கதையைத்தான் ரஜினிக்கு ஏற்ப பட்டி டிங்கரிங் பார்த்து சூப்பர் ஸ்டாரை நடிக்க வைக்கிறாராம் சிவா. 

news about rajini

*    நயன் தாராவின் வளர்ப்பு அண்ணன் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக நயன் தாரா நடிப்பது தெரிந்த சேதியே. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை நயனும் தன் சோஸியல் மீடியா பகுதியில் பதிந்தார். எக்கச்சக்க எதிர்மறை கமெண்டுகள். ‘இந்த வேஷத்துக்கு கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணன் தான் ஃபிட். நீங்க அவுட்’ என்று சிலர் போட, நயனுக்கு செம்ம டென்ஷன். 
(அம்மன் மன்னிச்சாலும் பூசாரி விக்னேஷ் சிவன் மன்னிக்க மாட்டாருடா)

*    தொடர் தோல்விகளுக்குப் பின் சூர்யா பெரியளவில் நம்பிக் கொண்டிருக்கும் ஒரே படம் ‘சூரரைப் போற்று’. விமானி, விமான நிறுவனம் போன்றவற்றை சுற்றி எடுக்கப்பட்டிருக்கும், உண்மைக் கதை சார்ந்த இந்தப் படத்தில் சூர்யாவின் கைடாக ‘பக்தவச்சலம் நாயுடு’ எனும் கேரக்டரில் நடிக்கிறார் தெலுங்கு நடிகர் மோகன் பாபு. 
(பல்ராம் நாயுடு கேரக்டரா இருந்தால், கமல்ஹாசன நடிக்க வெச்சிருக்கலாம். ஜஸ்ட் மிஸ்டு)

*    ஆர். சுந்தர் ராஜன் மிகப்பெரிய பகுத்தறிவுவாதி, பெரியாரின் சீடர். ஆனால் கடந்த இரு நாட்களாக அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்று சுற்றும் தகவலை குறிப்பிட்ட அவரது நெருஙிய உறவினர் அவரிடம், ‘உன் மேலே இருந்த திருஷ்டி கழிஞ்சுது. நீ நூறு வருஷம் நல்லா வாழ்வ’ என்றாராம். என்னத்த!...என சிரிச்சாராம் சுந்தர்ராஜன். 
(ஏனுங்க நெசமாவே நீங்க பகுத்தறிவு ஆளுங்களாக்கும்?)

*    விஸ்வாசம் எனும் தாறுமாறு ஹிட் படத்தை தல அஜித்தை வைத்து கொடுத்த சிறுத்தை சிவா, அடுத்து ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ எனும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆக்சுவலாக அந்த டைட்டிலும், கதையும் அஜித்துக்காக உருவாக்கப்பட்டதாம். விவேகத்துக்கு முன்பே இதை தலயிடம் அவர் சொன்னபோது .....நோ சிவா! என்று மறுத்துவிட்டாராம். 
அந்தக் கதையைத்தான் ரஜினிக்கு ஏற்ப பட்டி டிங்கரிங் பார்த்து சூப்பர் ஸ்டாரை நடிக்க வைக்கிறாராம் சிவா. 
(அந்த டைட்டில் ‘அண்ணாத்த’தான் இடிக்குது!) 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios