ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் இந்தி கன்னட மொழிகளில் தயாராகும் 'வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  அடுத்த ஆண்டு இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு புத்தாண்டையொட்டி பெங்களூரில் சன்னிலியோன் நடனம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆபாச நடிகை சன்னி லியோன் நடனம் ஆடினால் கலாச்சாரம் பாதிக்கும் என்று கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர் நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். இந்த நிலையில் வருகிற புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இதனை அவரது ரசிகர்கள் ட்விட்டரின் மூலம் தெரிவித்தனர். இந்த தகவல் தற்போது வைரலாக பரவவே,  சென்னையில் நடிகை சன்னி லியோன் நடனமாட உள்ள நிகழ்ச்சிக்கு, சமூக வலைத்தளம் மூலம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.