Asianet News TamilAsianet News Tamil

உச்சம் தொட்ட ரௌடி பேபி ! மீண்டும் மீண்டும் சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜா !!

மாரி 2  திரைப்படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் மீண்டும் ஒரு இமாலய சாதனையை படைத்துள்ளது. இந்தப் பாடல் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் ரவுடி பேபி பாடல்.பெற்றுள்ளது 

New record rowdy baby song
Author
Chennai, First Published Jun 3, 2019, 3:08 PM IST

நடிகர் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானத் திரைப்படம் மாரி 2. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் தோல்விப்படமாக அமைந்தது. ஆனாலும் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் செம வரவேற்பை பெற்றன.

New record rowdy baby song

இப்படத்தில் மாரி கெத்து, ரௌடி பேபி, மாரியின் ஆனந்தி என மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ரௌடி பேபி பாடலை தனுஷ் எழுதி, தீக்ஷிதா என்பவருடன் இணைந்து பாடியிருந்தார். இப்பாடலுக்கு நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். சாய் பல்லவியும் தனுஷும் ஆடியிருந்தனர்.

New record rowdy baby song

இப்பாடலின் வரிகளும், இசையும், பாடலுக்கேற்ற குரலும், சிறப்பான நடன அசைவுகளும், காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இணையத்தில் வைரலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலில் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.

New record rowdy baby song

மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் ரவுடி பேபி பாடல்.பெற்றுள்ளது 

New record rowdy baby song

இதற்கு முன் இணையத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக 3 படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் இருந்து வந்தது..

Follow Us:
Download App:
  • android
  • ios