பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், எந்த பிரச்னையும் இல்லாமல் ஸ்மூத்தாக போனதால் போட்டியாளர்கள் அனைவரும் நடிப்பதாக கூறப்பட்டது. இதனால் பிக்பாஸ் சீசன் ஒன்றுக்கு இருந்த வரவேற்ப்பு இந்த நிகழ்ச்சிக்கு இல்லாமல் போனது என கூறலாம். இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேல் இருந்த ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்தது.

இந்நிலையில் தற்போது வாரம்தோறும் ஒவ்வொரு போட்டியாளர் குறைய குறைய, சண்டை சச்சரவு பிக்பாஸ் வீட்டில் கூடிக்கொண்டே போகிறது.

இத்தனை நாள் வாய் வார்த்தையாக இருந்த சண்டை, இன்று அடிதடியாக மாறுகிறது என்பது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது.  

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுத்திருப்பதாக தெரிகிறது. வழக்கம் போல் மஹத் ஒரு நிதானம் இல்லாமல் விளையாடுகிறார், அதிலும் மற்றவர்களை அடிக்கிறார். இதனால் டேனியல் பாலாஜி கடும் கோபத்தில் அவன் என்னை அடித்துவிட்டான், இனி சும்மா இருக்க மாட்டேன் பிக்பாஸ் என்று கூறுகிறார்.

இவர்களின் சண்டை பிரச்சனை மாற, பாலாஜி, யாஷிகா, மும்தாஜ் என அனைவரும் தங்களுடைய கருத்தை கூறுகிறார்கள். இதன் மூலம் இன்று பெரிய பிரச்சனை வெடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.