தேர்தல் வந்தால் ஓட்டு போடுவது மட்டுமே தன்னுடைய கடமை, இந்திய குடிமகனாக ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருவதாகவும், அதை தவிர அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என அறிக்கை கூட வெளியிட்டு அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருப்பவர் தல அஜித்.

அரசியலின் வாடை கூட வேண்டாம் என அவர் ஒதுங்கி ஒதுங்கி சென்றாலும், அவரை விடாமல் சுற்றி சுற்றி வருகிறது அரசியல் பேச்சுகள்.

ஒருபக்கம் ரசிகர்கள் அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் கூட பிரபல அரசியல் தலைவர் ஒருவர், ரஜினி, கமல், விஜயெல்லாம் அரசியலுக்கு வரும் போது, அஜித் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நல்ல மனிதர் அஜித் போன்றோர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்பது போல் பேசி இருந்தார்.

இந்நிலையில் அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயருடன், மதுரை வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு கட்சி துவங்கப்பட்டுள்ளதாக ஆங்காங்கு போஸ்டர்கள் காணப்பட்டுகிறது.

உண்மையில் இப்படி ஒரு கட்சி துவங்கப்பட்டுள்ளதா... அல்லது ரசிகர்கள் செய்த செயலா இது என்பது இனி தான் தெரியவரும்.