பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் உருவான ஓவியா காதல் கதைக்கே இன்னும் விடைதெரியாத போது தற்போது மற்றொரு காதல் உருவாகுவது போல் தெரிகிறது. ஏற்கனவே நடிகர் ஹரீஷ் ஒரு டாஸ்கில் நடிகை பிந்து மாதவியை தேர்தெடுத்து அவருக்கு காதல் ப்ரோபோஸ் செய்தார்.

இந்நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள ஒரு டாஸ்கில் பிந்து NRI குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகவும், ஹரீஷ் மதுரைக்குடும்பத்தை சேர்த்த பையனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்துவைக்க உள்ளதாகவும் நேற்று வையாபுரி தெரிவித்தார்.

தற்போது பிந்துவை அமரவைத்து பையனை பிடித்திரிருக்கிறதா...?திருமணத்திற்கு சம்மதமா? என சினேகன் கேட்க அதற்கு பிந்து சரி என கூறுகிறார். தாம்பூலம் மாற்றலாமா என கேட்டதற்கு சரி என கூறுகின்றார். உடனே சினேகன் நீ இப்படி சொன்னால் அப்பா, அம்மாவை பற்றி யோசிக்க மாட்டியா என கேட்கிறார். உடனே பிந்து நான் ஒற்றுக்கொண்டால் அவர்களுக்கும் பிடிக்கும் என்று தெரிவிக்கிறார்.

மேலும் ஹரிஷை பார்த்து ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள உங்களுக்கு என்ன தெரியும் என கேட்கிறார். உன்னை நல்ல சைட் அடிப்பேன், நிரைய வேலை வாங்குவேன் என கூறுகிறார் அதற்கு பிந்து எனக்கு வேலை தெரியாது என கூறுகிறார். உடனே ஹரீஷ் வேலையை சொல்லிக்கொடுத்து வேலைவாங்குவேன் என கூறுகிறார்.

பின் பிந்து மாதவியை திருமணம் செய்துக்கொடுக்க வேண்டுமென்றால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என பல கேள்விகளை எழுப்பிகின்றனர் NRI குடும்பத்தினர். பின் ஒற்றுவரவில்லை என சிறு கலாட்டா ஆரம்பமாகி ஒருவழியாக  திருமணத்தில் நடந்தது போல் இந்த டிராமா முடிவு பெற்றது.