new film started

ரசிகர்களுக்கு எப்போதும் விருந்தளிக்கும் விதமாக புது புது படங்கள் எடுக்க பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது,.

 ஃப்ராகரன்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ் சஜிவ் - ஆன் சஜிவ் தம்பதியர் தயாரித்திருக்கும் படம் கேணி.

அள்ள அள்ள நீர் ஊறும் கேணிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இந்தப் படமும் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்து எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கும் தமிழ் & மலையாளம் , இருமொழிப்படம் தான் என்றாலும், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றார்கள்.

ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன், நாசர், பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், சாம்ஸ், பிளாக் பாண்டி என்றி விரிகின்றது நடிகர்களின் பட்டியல்.

தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன் , கல்லார கோபன் ஆகியோர் இசையமைத்திருக்கின்றார். பழனி பாரதி பாடல்கள் எழுதியிருக்கிறார். 

தண்ணீர்ப்பஞ்சத்தைப் பற்றிய படமாக இருந்தாலும், பணத்தைத் தண்ணீராய்ச் செலவளித்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர் என்பது காட்சிகளைப் பார்க்கும் போது தெரிகிறது.

இந்த வருடம் வெளியாகும் படங்களில் குறிப்பிடத்தக்க படமாக கேணி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லையென்றால் அது மிகையாகாது.

கேணி படத்தின் பாடல்களை சுஹாசினி வெளியிட்டார்.