பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2-ல்  கலந்து கொண்டு விளையாடி வரும் பிரபலங்கள் கேமரா கான்ஷியஸ்சோடு விளையாடி வருவதால் அவர்கள், உண்மை தன்மையோடு இல்லை என்பது போல் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 

இதனால் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய போட்டியாளர்களை உள்ளே கொண்டு வர நிகழ்ச்சியாளர்கள் முயற்சி எடுத்து வருவதாக  கூறப்படுகிறது.

 

இந்த தகவலை கடந்த வாரம் கூட தொகுப்பாளர் கமல்ஹாசன் சூசகமாக கூறியிருந்தார். இதே போல் தெலுங்கில் நடிகர் நானி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்று மூலம் நடிகை பூஜா ராமச்சந்திரன் உள்ளே செல்ல உள்ளதாக கூறி ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பூஜா ராமச்சந்திரன் விஜய் நடித்த 'நண்பன்' கார்த்தி சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா', உதயநிதி நடித்த 'நண்பேண்டா' உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த வாரத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகை நுழைவது போல், அடுத்த வாரம் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர் நுழைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.