பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இதுவரை ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேறி கொண்டு தான் இருந்தார்களே தவிர, வையல் கார்டு சுற்று மூலம் எந்த போட்டியாளரும் உள்ளே வரவில்லை என பிக்பாஸ் ரசிகர்கள் பலர் சமூக வளையதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது புதிய போட்டியாளர் ஒருவர் வையல் கார்டு சுற்று மூலம் களமிறங்கியுள்ளார். மேலும் சென்ற சீசனில் வையல் கார்டு சுற்று உள்ளே வந்த போட்டியாளர்கள் முகத்தை ப்ரோமோவில், காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் இந்தமுறை போட்டியாளர் யார் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளனர்.

அவர் வேறு யாரும் இல்லை... சென்னை 28 படத்தில் மிர்ச்சி சிவாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், போன்ற படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தான். சமீபத்தில் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, நாயகி என்கிற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் திடீர் என இந்த சீரியலில் இருந்து விலகினார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது... திடீர் என உள்ளே ஓடி வரும் நடிகை விஜயலட்சுமி "மேலே ஏறி வாறோம் நீ ஒதுங்கி நில்லு' என்கிற மாஸ் பாடலுக்கு நடன குழுவினருடன் உள்ளே சென்று நடனமாடுகிறார். உள்ளே விஜயலட்சுமி வந்தது கூட தெரியாமல் யாஷிகா தூங்குவதும் காட்டப்படுகிறது. 

இவர் நடனமாடுவதை பாலாஜி மற்றும் சென்றாயன் இருவரும் கை தட்டி ரசிக்க, மஹத் இவரை கட்டி தழுவி வரவேற்ப்பு கொடுக்கிறார். வையல் கார்டு சுற்று மூலம் களமிறங்கியுள்ள விஜயலட்சுமி உள்ளே நடக்கும் அட்டூழியங்களை ஒடுக்கி, மக்களின் ஆதரவை பெற்று இறுதி வரை செல்வாரா...? அல்லது பாதியில் வந்தது போல் பாதியிலேயே செல்வாரா...? என பொறுத்திருந்து பார்ப்போம்.