new bahubali poster released

நாளுக்கு நாள் பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்கான பரபரப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இயக்குனர் ராஜமௌலி மெல்ல மெல்ல இப்படத்தின் சுவாரிஸ்யத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்றிக்கொண்டே வருகிறார்.

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்திய படக்குழுவினர், தற்போது மேலும் ஒரு புது போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். 

இந்த போஸ்டரில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் ஆகியோர் மிக கோபமான முகத்தோடு உள்ளனர்.

அதிலும் அனுஷ்கா தலையில் தீச்சட்டி ஏந்தியவாறு உள்ளார்... மொத்தத்தில் படத்தின் போஸ்டரே படத்தை பார்க்க தூண்டும் வகையில் உள்ளது .