இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் தகவல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டைட்டில் ‘எனிமி’என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்தனர். வித்தியாசமான இந்த படத்தின் டைட்டிலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஷால் மற்றும் ஆர்யா நிஜத்தில் உயிர் நண்பர்களாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் எதிரிகளாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.   இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் விஷால், ஆர்யா ஆகிய இருவரில் யாருக்கு ‘எனிமி’ என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் மிருணாளினி நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் முடிவடைந்து... ஏப்ரல் மாதம் முடிவடைந்து, கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.