சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த தி லெஜண்ட் படத்தில் வாடி வாசல் பாடல் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த தி லெஜண்ட் படத்தில் வாடி வாசல் பாடல் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. பிரபல கடையான சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். இவர் தனது கடைகளின் விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க வைக்காமல் இவரே மாடன் உடைகளை அணிந்து விளம்பரங்களில் நடிப்பார். மேலும் இதன் மூலம் அவர் பிரபலமும் ஆனார். கடைகள் மூலம் இல்லாமல் விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர் என்றும் சொல்லலாம். இந்த நிலையில் சரவணன் சமீபத்தில் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ‛தி லெஜண்ட்' என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்கிறார். மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மே 29 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதோடு இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதோடு, முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலரையும் அழைக்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில் அண்மையில் இரண்டாவது பாடலமாக வாடி வாசல் என்ற வீடியோ பாடல் கடந்த 20 ஆம் தேதி வெளியானது. கிராமத்து பின்னணியில் திருவிழா மாதிரியான செட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஆடி உள்ளார்.

இந்த பாடல் தான் தற்போது நெட்டிசன்களுக்கு பேசுபொருளாகியுள்ளது. வாடி வாசல் பாட்டுக்கு சரவணன் ஆடும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வியந்துபோயியுள்ளனர். ஆனால் இந்த பாடல் பல பாடல்களின் மெட்டுகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர். வாடி வாசல் பாடல், பிரபுதேவாவும் நடிகை ரோஜாவும் சேர்ந்து ஆடிய வா முனிமா வா முனிமா வா, நடிகர் விக்ரமின் தூள் படத்தின் கப்பகிழங்கு பாடல், ஜிமிக்கி கம்மல் பாடல் என பல பாடல்களின் கலவையாக உள்ளது என்று நெட்டிசன்கள் கண்டுப்பிடித்து கலாய்த்து வருகின்றனர். பழைய பாடல்களின் மெட்டுக்களை பட்டி டிங்கிரி செய்து வாடி வாசல் பாடல் உருவாகியிருந்தாலும் அண்ணாச்சியின் ஆட்டம் வேர லெவல் என்று சொல்லலாம்.