ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைதளங்களில் அசத்தலான வரவேற்பை பெற்றது. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு ரிலீசாகவுள்ளது. 
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். 

சூர்யாவின் 39-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை, பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனையடுத்து, ஹரி, கவுதம் மேனன், வெற்றிமாறன் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.


இந்த நிலையில்,'என்ஜிகே', 'கைதி' உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளாராம். இந்தப் படத்தை, 'இன்று நேற்று நாளை' புகழ் இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


'இன்று நேற்று நாளை' என்ற அறிமுகப் படத்திலேயே டைம் மெஷின் எனும் கால எந்திரத்தை மையமாகக் கொண்ட கதையை அனைவரும் ரசிக்கும்படி தந்து கவனம் ஈர்த்தார் இயக்குநர் ரவிக்குமார். 

இந்தப் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்சன் படத்தை அவர் இயக்கிவருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை படைத்துவரும் இளம் இயக்குநர் ரவிக்குமாருடன் சூர்யா கூட்டணி சேரவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.