கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் நடிகை ஷோபனா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் பிரதமர் மோடி பங்கேற்ற மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஷோபனா, “மகளிர் மசோதாவை நிறைவேற்றிய சிறந்த தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் மோடியின் தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பெண்களை தெய்வமாக வழிபடுவது நமது பாரம்பரியம். ஆனால் பல இடங்களில் அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். 

இன்றும் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. நம்மிடம் ஒரு சகுந்தலா தேவி, ஒரு கல்பனா சாவ்லா மற்றும் ஒரு கிரண் பேடி மட்டுமே உள்ளனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்நாளில் இத்தனை பெண்களைப் பார்ப்பது இதுவே முதல் முறை” என்று ஷோபனா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் விமர்சனம் முதல் ஹேட்டர்ஸுக்கு பதிலடி வரை.... Pre Release-ல் தனுஷ் பேசிய ஹைலைட்டான விஷயங்கள்

இப்படி மோடியை புகழ்ந்து தள்ளிய நடிகை ஷோபனானை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அவரை 'சங்கி' என்றும் விமர்சித்து உள்ளனர். ஷோபனா போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வராமல் இருந்தால் நிறைய சாதிக்கலாம் என்றும், அவரின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நடிகை ஷோபனா தமிழில் ரஜினிக்கு ஜோடியாக தளபதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் பட விழாவில் பாலியல் சீண்டல்... தனுஷ் ரசிகரை ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த நடிகை- வீடியோ இதோ