தல அஜித் நடிப்பில், ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக பாலிவுட் நடிகை வித்தியா பாலன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், மற்றும் ஆண்ட்ரியா தரங் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இன்று,  இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் EDM பாடல் மாலை 6.45 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக, போனி கபூர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  

அதன்படி, படக்குழு குறித்த நேரத்தில், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதற்கான ஹாஷ்டாக் உருவாக்கி இந்த பாடலை வைரலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் தலையின் ரசிகர்கள்.

இந்த பாடல் வீடியோ இதோ: