பாலிவுட் திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில், வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை.  தல அஜித் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில்,  'நேர்கொண்ட பார்வை' படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

வழக்கமாக புதிய திரைப்படங்கள் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் வெளியாகி வரும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இதனால் அஜித்தின் ஆஸ்தான கிழமையில் ஒன்றான வியாழ கிழமையே, நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் இதுவரை படக்குழுவினரிடம் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.