Asianet News TamilAsianet News Tamil

இந்தியை விட 22 நிமிடங்கள் அதிகம் ஓடும் ‘நேர்கொண்ட பார்வை’...அதிகரித்த காட்சிகள் என்னென்ன?...

இன்று இன்னும் இருமணி நேரங்களில் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் ‘அகலாதே’பாடல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தின் ஒரிஜினலான ‘பிங்க்’படத்தை தமிழ்ப்படத்தின் நீளம் 22 நிமிடங்கள் அதிகமாகவுள்ள தகவல் அஜீத் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

nerkonda parvai movie length revealed
Author
Chennai, First Published Jul 25, 2019, 4:08 PM IST

இன்று இன்னும் இருமணி நேரங்களில் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் ‘அகலாதே’பாடல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தின் ஒரிஜினலான ‘பிங்க்’படத்தை தமிழ்ப்படத்தின் நீளம் 22 நிமிடங்கள் அதிகமாகவுள்ள தகவல் அஜீத் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.nerkonda parvai movie length revealed

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.nerkonda parvai movie length revealed 

பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் ரன்னிங் டைம் 158.11 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் படத்தின் ரன்னிங் டைம் 136 நிமிடங்கள் தான். ரீமேக்காக இருக்கும் பட்சத்தில், இரு படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசப்படுவது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், பிங்க் படத்தை காட்டிலும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் சண்டை காட்சிகள், பாடல்கள் அதிகம் உள்ளதால் ரன்னிங் டைமில் வித்தியாசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி ஒரிஜினலில் அமிதாப்புக்கு ஜோடி இல்லை. ஆனால் தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலனும் அவருடன் ஒரு ரொமாண்டிக் பாடலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios