அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 10 தேதி, வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் திடீர் என ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு,  ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , இந்த படத்தை சென்சார் அதிகாரிகளின் சான்றிதழுக்காக அனுப்பி வைத்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.