அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’சென்சார் முடிந்து திரும்பியுள்ள நிலையில் அப்படம் ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. பெண்களுக்கு எதிரான சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டதாகவும் ஆனால் காட்சிகள் எதுவும் வெட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வந்திருக்கின்றன.

’நே.கொ.பார்வை  படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தபடத்தின் தமிழக தியேட்டர் உரிமைகள் இன்னும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்ற செய்திகள் பரவலாக நடமாடிவரும் நிலையில், இந்த படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நீக்கப்பட்ட மற்றும் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதில், பெண்களை குறிக்கும் சில கெட்டவார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் நீக்கப்பட்ட வசனங்களை விட அதிக ஆபாசமான வசனங்கள், படத்தின் மையக்கருத்தைக் காரணமாகக் கொண்டு, இந்தி ‘பிங்க்’படத்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.