விஸ்வாசம் படத்தின் மெகா பிளாக்பஸ்டரை கொண்டாடி தீர்த்து கொஞ்சம் நாள் கூட ஆகாத நிலையில், மீண்டும் அஜித் ரசிகர்களின் கைக்களுக்கு சென்றுள்ளது சோசியல் மீடியா, ஆமாம் அஜித்தின் அடுத்த படமான நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் இன்றுமாலை வெளியாவதாக அறிவித்திருந்த நிலையில், அந்த படத்தில் அஜித்தின் கருப்பு கோட்டில் கம்பீர லுக்கில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்.

ஹிந்தி படத்தின் ரீமேக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தவிர இப்படத்தின் அப்டேட்கள் எதுவும் எதுவும் வெளியாகவில்லை. தல அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி  டிரெய்லர் வெளியாகும் என  ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக்கொண்டிருந்த நிலையில் படக்குழு கைவிரித்தது.

இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் தனது, 'காத்திருந்தது போதும். இன்று மாலை "நேர்கொண்ட பார்வை" டிரெய்லர் ரிலீசாகிறது என பதிவிட்டிருந்தார்.

தல ரசிகர்கள் எதிர் பார்க்காத இந்த நேரத்தில் தயாரிப்பாளரின் இந்த தெறித்தனமான அறிவிப்பு அஜித் ரசிகர்களை அதிர்ச்சிகலந்த ட்ரீட்டாக அமைந்துள்ளது. எப்பதுமேட்ரெய்லர் வெளியானதும் ட்ரெண்டாக்கும் தல ரசிகர்கள், இன்று மாலை ரிலீஸ் ஆகும் ட்ரெய்லரை தற்போதே ஹேஷ்டாக் போட்டு சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆக்கியிருள்ளனர்.

இன்று மாலை வெளியாகும் நேர்கொண்ட பார்வை டிரெய்லரை உலகளவில் டிரெண்டிங் ஆக்குவதுமட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.