Do not forget your heartfelt expectation
“இரண்டாம் உலகம்” படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவை வைத்து “நெஞ்சம் மறப்பதில்லை” பழைய பட டைட்டிலை வைத்து புதிய படத்தை உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன்.
இப்படம் ரெடியாகி சில மாதங்கள் கடந்துவிட்டன. முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.
ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து படத்தை வெளியிட முடியாமல் போனது. தற்போது கடைசியாக இப்படத்தை ஜூன் மாதம் 2-ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதற்கான பேப்பர் விளம்பரத்தையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.
