Asianet News TamilAsianet News Tamil

லிட்டில் சூப்பர்ஸ்டார், லேடி சூப்பர்ஸ்டார் ஓவர்... அடுத்தது சூப்பர்ஸ்டார் தான் - அதிரடி காட்டும் நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Nelson team up with rajinikanth
Author
Tamil Nadu, First Published Dec 24, 2021, 9:29 PM IST

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Nelson team up with rajinikanth

பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன். அவர் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் நெல்சன் படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Nelson team up with rajinikanth

இந்நிலையில், இயக்குனர் நெல்சன் அடுத்ததாக ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios