இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பட்டாஸ்'. இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று ரிலீஸாகியுள்ளது. தியேட்டர்களில் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோவைக் காண வந்திருந்த தனுஷ் ரசிகர்கள் மரண மாஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்பா, மகன் இரண்டு கெட்டப்புக்களில் நடிகர் தனுஷ் கலக்கியிருக்கிறார். 

இந்த படத்தில் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை, மெஹரின் பிரிசண்டா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பின்,  தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கும் இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் மூலம் தான் ஒரு நடிப்பு அசுரன் தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தனுஷ். 

பட்டாஸ் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர். அந்த படத்தில் வரும் அப்பா திரவிய பெருமாள் கேரக்டரின் உருவத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இந்த சமயத்தில் தனுஷ் சிலை அச்சு அசலாக அவரைப் போலவே இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறினாலும், அது பார்ப்பதற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் போல் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஆசை, ஆசையா சிலை வச்சா இப்படி சொதப்பிடுச்சே என தனுஷ் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர்.