'நீயா நானா' கோபிநாத் வீட்டில் நடந்த சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூலம் பட்டி... தொட்டி... வரை சிறந்த தொகுப்பாளர் என்கிற அங்கீகாரத்தை பதித்தவர் கோபிநாத்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூலம் பட்டி... தொட்டி... வரை சிறந்த தொகுப்பாளர் என்கிற அங்கீகாரத்தை பதித்தவர் கோபிநாத்.
இவர் வாரம் தோறும் தொகுத்து வழங்கும் விவாத நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை தாண்டி, நடிகராகவும் வெள்ளித்திரையில் வலம் வர துவங்கியுள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை, சந்திரன் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ள சம்பவம் கோபிநாத் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று காலை 10 மணியளவில், இறந்த இவருடைய உடல், இன்று காலை 9 மணி அளவில் அவருடைய சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கோபிநாத்தின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கோபிநாத்தின் தந்தை மறைவிற்கு தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.