ஸ்ரீ பிரியா மற்றும் கமலஹாசன் இணைந்து நடித்திருந்த படம் நீயா. இச்சாதாரி நாகம் எனும் மனிதர்கள் போல உருவம் மாறும் நாக பாம்பினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த் திரில்லர் படம் அந்த காலத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது. இன்றளவும் தமிழில் பாம்பு படம் என்றதும் முதலில் அனைவர் நினைவிற்கும் வருவது இந்த நீயா? படம் தான். 

இந்த படத்தில் ஸ்ரீ பிரியா தான் பாம்பாக நடித்து மிரட்டி இருப்பார். தற்போது இதே பெயரில் நாக பாம்பு கதையை மையமாக வைத்து மீண்டும் நீயா 2 படம் தயாராகிவருகிறது. இந்த படத்தில் வரலஷ்மி சரத்குமார், லஷ்மி ராய் மற்றும் கேத்தரின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். 

சமீப காலமாக சின்னத்திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் சீரியல் நாகினி. இது போன்ற மாயாஜால படங்களின் வரவு தமிழ் சினிமாவில் குறைந்திருக்கும் இந்த கால கட்டத்தில் மீண்டும் இது போன்ற படங்கள் தலை தூக்க நாகினியும் ஒரு காரணம் என்றே கூறலாம். 
இது ஒரு புறம் இருக்க இந்த மூன்று அழகிய கதாநாயகிகளை வைத்து தற்போது பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருகிறது நீயா? திரைப்படம். 

இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஃபஸ்ட் லுக்கில் வரலஷ்மி மற்றும் லஷ்மி ராய் நாகராணிகள் போன்ற வேடத்தில் இருக்கின்றனர். கேத்தரின் சாதாரண பெண் போல தோற்றமளிக்கிறார். 
அதிலும் நாகராணிகளாக வேஷமிட்டிருக்கும் வரலஷ்மியும், லஷ்மிராயும் இடம் பெற்றிருக்கும் அந்த ஃபஸ்ட் லுக் போஸ்டர் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கிறது. 

இதனால் இந்த பஸ்ட்லுக் போஸ்டர் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த போஸ்டரை விமர்சனம் செய்திருக்கும் ரசிகர்கள் இது நீயா? போஸ்டரா இல்லை கிளாமர் பட போஸ்டரா என கலாய்த்திருக்கின்றனர். எது எப்படியோ ஃபஸ்ட் லுக் மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிட்டது. எப்படியும் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் வரும் புது நீயா? படம் பழைய நீயா படத்தை விட திரில்லிங்காக இருந்தால் சரி.