யாவரும் நலம் படத்தில் மாதவனுக்கு நாயகியாக அறிமுகம் கொடுத்த நீத்து சந்திரா ஆதிபகவான், தீராத விளையாட்டுப்பிள்ளை போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

இவருக்கு தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் சமீபத்தில் வெளியான சிங்கம்-3 படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார்.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டரில் நேற்று ரசிகர்களிடம் உரையாடினார், அப்போது விஜய் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் எப்போது விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்கள்’ என கேட்டார்.

அதற்கு அவர் ‘நீங்கள் முதலில் விஜய்யிடம் இதை கேளுங்கள்’ என பதில் கூறி செம பல்ப் கொடுத்துள்ளார். 

நீத்து சந்திரா நடிக்க மாட்டேன் என்று சொல்வது போல அந்த நபர் கேள்வி எழுப்பியதும், இவர் மனதில் உள்ளதை கொட்டிவிட்டார் என பலரும் கருது கூறி வருகின்றனர் .