ஐயா படத்தின் முதல் நாள் ஷுட்டிங்குக்கு பஸ்சில் வந்து இறங்கியவர் நயன்தாரா. மெல்ல மெல்ல வளர்ந்து இன்று இவ்வளவு உயரத்தில் நிற்கிறார்.  இந்த நிலையில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அம்மனுக்கு விரதம் எனச் சொல்லி விட்டு வான்கோழி விருந்தா? என பலரும் அதிர்ந்து வருகின்றனர். 

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குனராக அவதாரம் எடுத்து மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தை, சவரணன் எனும் மற்றொரு இயக்குனருடன் இணைந்து இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த 28ம் தேதி பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் நாயகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பட பூஜையில் கலந்துகொள்ளவில்லை. அவர் காதலர் விக்னேஷ் சிவன் உடன், அமெரிக்காவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சில நாட்களில் படப்பிடிப்பில் இணைவார் என தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க சில தினங்கள் முன்பு, இத்திரைப்படத்திற்காக 40 நாட்கள் நயன்தாரா கடும் விரதம் இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.

இதனை கண்டு, ‘ஒரு கிறிஸ்தவராக இருந்தும் அம்மன் கெட்டப் என்றதும் விரதம் எல்லாம் இருக்கிறாரே’ என ரசிகர்கள் நயன்தாராவின் அர்ப்பணிப்பை கண்டு வியந்து பாராட்டி இருந்தனர். இதற்கிடையே காதலுடனான அமெரிக்க சுற்றுப்பயணத்தில், அங்கு பரவலாக கொண்டாடப்படும் தேங்க்ஸ் கிவ்விங் பண்டிகையை கொண்டாடிய அவர், வான்கோழி கறி சமைத்து அருகில் ஆட்டம் போடும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இதனை கண்டு கடுப்பான ரசிகர்கள் சிலர், ‘விரதம் என செய்தி வெளியாகி சில நாட்கள் கூட ஆகவில்ல அதுக்குள்ளே வான்கோழி விருந்தா? உங்க பட விளம்பரத்துக்கு எங்கள் மத நம்பிக்கைதான் கிடைத்ததா?’என சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார்கள்.