தமிழ்திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா,.கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே ஹிட் தான். லேடி சூப்பர் ஸ்டாராக கோலிவுட்டில் வலம் வரும் இவர் இப்போதும் விசுவாசம், கொலையுதிர் காலம், சாயிரா நரசிம்ம  ரெட்டி என மெகா பட்ஜெட் படங்களில் பிஸியாக இருக்கிறார். திரையுலக வாழ்க்கை வெற்றிகரமாக போனாலும், இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கடந்து தான் வந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சர்ச்சை நாயகன் சிம்பு உடனான காதல் விவகாரம். அதன் பிறகு பிரபு தேவாவுடன் திருமணம் வரை போய் கடைசியில் பிரிந்தது என அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் தற்போது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். திரையுலக வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் நல்ல ஆதரவாக இருந்து வரும் இவர்கள், நிஜ வாழ்க்கையிலும் இணைந்திட திட்டமிட்டிருக்கின்றனர்.


அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் கூட அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த இருவரும் இணைந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு வரும் பக்தர்களுக்கு கோவிலில் இருந்து உணவு தானமாக வழங்கப்படும். 
அங்கு பக்தர்களோடு பக்தர்களாக நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் உணவு சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது