அவர் நடிக்கும் படமாக இருந்தால் கூட அந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டார். ரிலீஸ் நேரத்தில் புரமோஷனா?  திட்டவட்டமாக மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவர் தன் பணத்தை போட்டு ஒரு படம் எடுக்கிறார். வரவேண்டியதுதானே? தன் வருங்கால கணவர் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’பட பூஜைக்கு நயன்தாரா ஆப்சென்ட். அப்படியானால் ஏதோ ஒரு செண்டிமெண்ட் இருக்கும் தானே.

இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அந்த செண்டிமெண்டை பகிர்ந்து கொண்ட நயன்தாரா, “நான் எந்த பட பூஜைக்கு போனாலும் அந்தப்படம் ஓட மாட்டேங்குது. அதனால்தான் செல்வதில்லை ” என்று விளக்கமளித்து வருகிறாராம். இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகைக்கு இவ்வளவு சிறிய செண்டிமென்டா? 

இது ஒருபுறமிருக்க திருமணத்தை பற்றி அவரது காதலர்  விக்னேஷ் சிவன், "என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. அடுத்தடுத்து நிறைய வேலைகள் உள்ளன. இப்போதைக்கு திருமணம் இல்லை. திருமணம் பற்றி விளக்க முடியாது’’ எனக் கூறுகிறார்.  பருவத்தே பயிர்செய் என்கிற பழமொழி விக்னேஷ் சிவனுக்கு தெரியாதோ..?