லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி ஒருவழியாக ஹீரோவாக அவதாரம் எடுத்து விட்டார். 

முதல் படத்திற்காக வீட்டிலேயே நடிப்பு பயிற்சி எடுத்துவருகிறார். சுமார் முப்பது கோடி செலவில் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கப்போகிறார் அருள் அண்ணாச்சி. யார் ஹீரோயின்? அங்குதான் அண்ணாச்சிக்கு சிக்கலே. நயன்தாராவை அணுகி இருக்கிறார்கள். அம்மணி முதல் முயற்சியிலேயே முட்டுக்கட்டை போட்டு விட்டார். 

அடுத்து அவருடன் விளம்பரத்தில் சந்தோஷமாக நடித்த ஹன்சிகா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் ஓட்டம் எடுப்பதாகக் கூறப்படுகிறது. விளம்பரம் வேறு. சினிமா வேறு... என்று கூசாமல் மறுக்கும் இவர்களுக்கு ஆத்திரமூட்ட முடிவெடுத்துவிட்டார் அருள் அண்ணாச்சி. மும்பை டாப் ஹீரோயின் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.

இந்தப்படத்திற்கு இயக்குநர் யார் தெரியுமா? அண்ணாச்சியின் விளம்பரப்படங்களை உருவாக்கி வரும் ஜேடி-ஜெர்ரி இரட்டையர்கள்தான்.