‘தர்பார்’படத்தில் நடித்துவிட்ட நிலையில் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ‘கஜினி’படத்தில் தான் ஏமாற்றப்பட்ட ஃப்ளாஷ்பேக் நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். அப்படத்தில் நயன்தாரா மிகவும் ஒரு டம்மியான கேரக்டரில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினார்.

‘தர்பார்’படப்பிடிப்பின் இறுதி நாளன்று தனது சம்பள பாக்கி செட்டில் செய்ய்ப்படாததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகாமல் அடம் பிடித்த நயன்தாரா,பின்னர் பணம் செட்டில் ஆனவுடன் நடித்துக்க்கொடுத்தார். அச்செய்தியை தயாரிப்பாளர் தரப்பும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பும் வேண்டுமென்றே பரப்பி விட்டனர். 

இந்நிலையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த நயன் இயக்குநர் முருகதாஸை பழிவாங்கும் வகையில் தனது 15 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் தான் ஏமாந்த ஒரே படம் கஜினிதான் என்று கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் முதலில் தன்னிடம் கதையைச் சொன்னபோது சித்ரா என்கிற அந்த கேரக்டர், இன்னொரு கதாநாயகியான அசினுக்கு இணையானது என்று சொன்னதாகவும் ஆனால் படம் ரிலீஸாகிப் பார்த்தப்போது அந்த கேரக்டர் மிகவும் டம்மியாக இருந்ததாகவும் புலம்பினார். மேலும் தனது 15 வருட சினிமா அனுபவத்தில் மறக்க விரும்பும் ஒரே படமும் கஜினிதான் என்றும் அந்தப் பேட்டியில் நயன் கூறியுள்ளார். ‘கஜினி படம் 2008ல் ரிலீஸானது. 11 வருடங்களுக்குப் பிற்கு நயன்தாரா இவ்வாறு பேட்டி அளிக்கக் காரணம் ‘தர்பார்’படக் கசப்பு அனுபவம்தான் என்கின்றனர் அப்பட வட்டாரத்தினர்.