தற்போது ஏறக்குறைய எழுபது படங்களை நெருங்கியிருக்கும் நடிகை நயன்தாரா தனது 100 வது பட அறிவிப்பை நெருங்கும் வரை திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தனது காதலன் விக்னேஷ் சிவனிடம் உறுதியாகக் கூறிவிட்டாராம்.

நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் ’லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ என்று சுமார் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவை தவிர விஜய் - அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

இப்படி பிசியாக படங்களில் நடித்தாலும் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது காதலருடன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஊர் சுற்றச் சென்று அதை வலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாவதற்கும் குறைச்சல் இல்லை. 

’84ம் ஆண்டு அவதரித்ததாகக் கருத்தப்படும் நயனுக்கு தற்போது வயது 36 ஆகும் நிலையில், அவர் எப்போதுதான் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்வியும் விக்னேஷ் சிவனைப்போலவே அவரைத் தொடர்ந்து துரத்தி வரும் நிலையில் தனது உதவியாளர்களிடம் பட எண்ணிக்கையில் சென்சுரி அடிச்ச பிறகுதான் கல்யாணமே பண்ணிக்குவேன்’ என்று படு கூலாகச் சொல்கிறாராம்.

இதுவரை சுமார் 70 ரன்களே அடித்திருக்கும் நயன் எவ்வளவு ஃபாஸ்டாக படங்கள் கமிட் செய்தாலும் வருடத்துக்கு எட்டு படங்கள் என்று வைத்துக்கொண்டால் அவர் செஞ்சுரியத்தொட அட்லீஸ்ட் நான்கு வருடங்களாவது ஆகும். ஆக நயனை ஒருதலையாய்க் காதலிப்பவர்களுக்கு இன்னும் நான்கு வருடங்களுக்கு ஆபத்தில்லை.