இன்னும் சில தினங்களில் அஜீத்,விஜய் படங்களுக்கு இணையாக பேசப்படு பொருளாகப் போகும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சியின் படத்துக்கு ஹீரோயின் தேடும் படலத்தில் நயன்தாரா பெயர் முதல் நபராகப் பரிசீலனையில் இருந்தது குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து விளம்பரப்படங்கள் இயக்கியே சென்னையின் முக்கிய கோடீஸ்வரர்களுல் இருவராக மாறியுள்ள ஜேடி-ஜெர்ரிகளின் இயக்கத்தில் ‘அள்ளிக்கோ அள்ளிக்கோ’ அண்ணாச்சி ஒரு நாயகனாக உதயமாகப்போகும் செய்தி அனைவரும் அறிந்ததே. 30 முதல் 50 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்துக்கு கதாநாயகியாகும் பாக்கியம் யாருக்கு இருக்கிறது என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி.

இந்நிலையில் அண்ணாச்சியின் ஆசைப்படி, ‘கட்டி இழுத்துப்பாப்போம் வந்தா மல... வரலைன்னா கயிறு’என்ற எண்ணத்துடன் ஜேடியும் ஜெர்ரியும் நயன் தாராவைக் கேட்கும் பொருட்டு விக்னேஷ் சிவனை அணுகினார்களாம். விக்னேஷ் சிவனும் கொஞ்சமும் டென்சனாகாமல் நயனிடம் தகவலைச் சொல்ல அவரோ ‘10 கோடி சம்பளம். சிங்கிள் பேமெண்ட். ஓ.கே.வான்னு கேளுங்க’ என்று காமெடியாக சொல்லி அனுப்ப அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட அண்ணாச்சி, ஜேடி-ஜெர்ரி வட்டாரம்,’பொட்டி ரெடி எங்கே எப்போ வாங்கிக்கிறீங்க’ என்று துரத்த ஆரம்பித்தார்களாம். அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நயன் ‘தப்பா எடுத்துக்க வேண்டாம்.கைவசம் ஏழெட்டு படம் இருக்கு. அடுத்த படத்துல பாக்கலாம்’என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அண்ணாச்சி அடுத்து டிக் அடித்திருப்பது தமன்னா, ஹன்சிகா மோத்வானி ஆகியோரின் பெயரை. இருவருமே ரெடி. ஆனால் அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.