ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பார்". இந்த படம் பொங்கல் விருந்தாக வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடித்துள்ளார். 

ஏற்கனவே "தர்பார்" படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களும் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நேற்று புத்தாண்டு வாழ்த்துடன் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

செம்ம எங் லுக்கில் இருக்கும் சூப்பர் ஸ்டாரும், க்யூட்டாக இருக்கும் நயனும் ஜாலியாக பேசி சிரிப்பது போன்ற அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இந்நிலையில் "தர்பார்" படத்தின் புரோமோஷன் வேலைகளும் தீயாய் நடைபெற்று வருகிறது. 'கபாலி' படத்திற்கு பிறகு "தர்பார்" படத்தின் போஸ்டர் விமானங்களில் ஒட்டப்பட்டு, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த சமயத்தில் புரோமோஷனுக்காக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நயனை பார்த்து சொக்கிப் போன சூப்பர் ஸ்டார் வார்த்தை வராமல் திக்குவார். உடனே நயன்தாரா அவரைப் பார்த்து சாரி, எனக்கு உருது தெரியாது என்று கலாய்த்துள்ளார். 

அந்த வீடியோவைப் பார்த்த நயனின் ரசிகர்கள், தலைவிக்கு என்னா தில்லு பார்த்தியா?.... சூப்பர் ஸ்டாரையே கலாய்ச்சிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நயனின் அழகை ரசிப்பதற்காகவே அந்த வீடியோவை ரசிகர்கள் மீண்டும், மீண்டும் ப்ளே செய்து பார்த்து வருகின்றனர்.